ADDED : ஜூன் 27, 2024 06:50 AM

''சென்னப்பட்டணாவில் நிகில் குமாரசாமி போட்டியிட்டாலும், ஆதரவு கொடுப்பேன்,'' என, பா. ஜ., முன்னாள் அமைச்சர் யோகேஸ்வர் அறிவித்துள்ளார்.
பா.ஜ., முன்னாள் அமைச்சர் யோகேஸ்வர் டில்லியில் நேற்று அளித்த பேட்டி:
சென்னப்பட்டணா இடைத்தேர்தலில் ம.ஜ.த., சின்னத்தில் போட்டியிடும்படி என்னிடம் யாரும் கேட்கவில்லை. எனக்கு வாய்ப்பு கிடைத்தால் பா.ஜ., வேட்பாளராக போட்டியிடுவேன். எங்கள் கட்சி என்ன சொல்கிறதோ அதை கேட்பேன்.
சென்னப்பட்டணாவில் நிகில் குமாரசாமி போட்டிட்டாலும், எனது ஆதரவு உண்டு. நான் எந்த சதியும் செய்ய மாட்டேன்.
இடைத்தேர்தல் நடக்க உள்ளதால் தேசிய தலைவர்களை சந்தித்துள்ளேன். வேட்பாளர்களை முடிவு செய்ய இன்னும் கால அவகாசம் தேவை. வாரத்தில் இரண்டு நாட்கள் துணை முதல்வர் சிவகுமார், சென்னப்பட்டணா வருகிறார்.
காங்கிரஸ் வேட்பாளராக சிவகுமார் குடும்பத்தில் யாராவது ஒருவர் தான் போட்டியிட போகின்றனர். குமாரசாமி மீது சென்னப்பட்டணா மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அவரது ஆசி இல்லாமல் எதுவும் செய்ய முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
-- நமது நிருபர்--