முதல்வர்களில் யாருக்கு செல்வாக்கு; கருத்துக்கணிப்பு சொல்வது இதுதான்!
முதல்வர்களில் யாருக்கு செல்வாக்கு; கருத்துக்கணிப்பு சொல்வது இதுதான்!
ADDED : ஆக 24, 2024 07:52 AM

புதுடில்லி: சிறப்பாக செயல்படும் முதல்வர்களில் முதல் இடத்தை 33.2% மக்கள் ஆதரவுடன் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் பிடித்துள்ளார். 4ம் இடத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் பிடித்துள்ளார் என்பது கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
30 மாநிலங்களில் 1.36 லட்சம் பேரிடம் எந்த மாநில முதல்வர் சிறப்பாக செயல்படுகிறார் என்று தனியார் நிறுவனம் கருத்துக்கணிப்பு நடத்தியது. அந்த ஆய்வில் வெளியான தகவல்கள்:
* முதல் இடத்தை 33.2% மக்கள் ஆதரவுடன் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் பிடித்துள்ளார். அதேநேரத்தில், உத்தரப் பிரதேசத்தில் அவரது செயல்திறன் மதிப்பீடு சரிவைக் கண்டது.
* யோகியின் புகழ் குறைந்ததற்கு, சமீபத்திய லோக்சபா தேர்தல் 2024ல் உத்தரபிரதேசத்தில் பா.ஜ.,வில் செயல்பாடுகள் மக்களுக்கு அதிருப்தி ஏற்படுத்தியதே காரணம்.
* லோக்சபா தேர்தலில், உத்தரபிரதேசத்தில் பா.ஜ.,வால் 33 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. லோக்சபா தேர்தலில் சமாஜ்வாடி கட்சி 37 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
* 2ம் இடத்தை 13.8% மக்கள் ஆதரவுடன் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும், 3ம் இடத்தை 9.1% மக்கள் ஆதரவுடன் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பிடித்துள்ளனர்.
* 4ம் இடத்தை 4.7% மக்கள் ஆதரவுடன் தமிழக முதல்வர் ஸ்டாலினும், 5ம் இடத்தை 4.6 சதவீத மக்கள் ஆதரவுடன் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் பிடித்துள்ளனர்.
* மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் செயல்பாடு குறித்து 35 சதவீதம் பேர் திருப்தியும், 28 சதவீதம் பேர் அதிருப்தியும் தெரிவித்தனர். மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

