ADDED : செப் 17, 2024 09:40 PM
இந்திரபிரஸ்தா:“உங்களால் முகத்தை மாற்ற முடியும். ஆனால் கட்சியின் குணாதிசயத்தை மாற்ற முடியாது,” என, புதிய முதல்வர் தேர்வு குறித்து டில்லி பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா கருத்துத் தெரிவித்தார்.
மாநிலத்தின் புதிய முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் ஆதிஷி நேற்று தேர்வு செய்யப்பட்டார். இதுகுறித்து பா.ஜ., மாநிலத் தலைவர் வீரேந்திர சச்தேவா கூறியதாவது:
உங்களால் முகத்தை மாற்ற முடியும். ஆனால் கட்சியின் தன்மையை மாற்ற முடியாது. டில்லியை அரவிந்த் கெஜ்ரிவால் சூறையாடியது மக்களுக்கு தெரியும்.
அவர்கள் ஒவ்வொரு துறையிலும் ஊழல் செய்துள்ளனர். இப்போது அந்த ஊழலுக்கு மக்கள் பதில் சொல்வார்கள்.
யார் முதல்வராக இருந்தாலும் சரி, அரவிந்த் கெஜ்ரிவாலின் 10 ஆண்டுகால ஊழலுக்கு மக்களிடம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
ஆம் ஆத்மி கட்சி, ஒரு மாற்றத்தில் ஈடுபட்டுள்ளது. ஆனால் இந்த மாற்றம், ஊழலால் ஏற்பட்ட கறையை அழிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.

