UPDATED : ஜூலை 27, 2024 07:38 PM
ADDED : ஜூலை 27, 2024 07:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை: மும்பையில் 20 வயது இளம் பெண் கொடூரராக கொலை செய்யப்பட்டு புதரில் வீசிச்சென்ற சம்பவம் நடந்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் நவி மும்பை யூரான் நிலையம் அருகே புதரில் இளம் பெண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து வந்த போலீசார் புதரிலிருந்து சடலத்தை மீட்டனர். அவரது உடலில் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தியதில் கொலையான இளம் பெண் மும்பை பிலாப்பூரைச் சேர்ந்த யாஷ்ஸ்ரீ ஷிண்டே என்பதும் தெரியவந்தது.
இவரை அவரது காதலன் தான் கொலை செய்து புதரில் வீசிச்சென்றுள்ளது தெரியவந்தது. அவரை தேடி வருகின்றனர்.ரயில் நிலையத்தில் சிசிடிவி காட்சி பதிவுகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.