சிறுமி குடும்பத்தினர் ஒதுக்கிவைப்பு இளைஞர் கைது; அதிகாரிகள் சமரசம்
சிறுமி குடும்பத்தினர் ஒதுக்கிவைப்பு இளைஞர் கைது; அதிகாரிகள் சமரசம்
ADDED : செப் 14, 2024 11:36 PM
யாத்கிர் : குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சிறுமியை பலாத்காரம் செய்ததாக, மற்றொரு சமுதாய இளைஞர் மீது புகார் அளிக்கப்பட்டது. சிறுமி குடும்பத்தினரை ஒதுக்கி வைத்த கிராமத்தினரை அதிகாரிகள் சமாதானம் செய்தனர். இளைஞர் கைது செய்யப்பட்டார்.
யாத்கிர் மாவட்டம், ஹுன்சகி தாலுகாவில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை, மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் காதலித்தார். இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர்.
சிறுமி கருவுற்றதால், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார்.
ஏற்க மறுத்த இளைஞர், இவ்விஷயத்தை வெளியே சொன்னால், தொலைத்துவிடுவேன் என மிரட்டி உள்ளார்.
இதுதொடர்பாக, சிறுமியின் குடும்பத்தினர், போலீசில் புகார் அளித்தனர்.
இதனால் இளைஞரின் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கோபமடைந்து, அந்த சிறுமி குடும்பத்தினரை ஒதுக்கி வைத்தனர். இது தொடர்பாகவும் நாராயண்பூர் போலீசில், அவர்கள் புகார் செய்தனர்.
தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகத்தினர், இக்கிராமத்திற்கு நேற்று முன்தினம் சமாதான பேச்சு நடத்தி, பிரச்னையை சுமூகமாக முடித்தனர்.
சிறுமியை கர்ப்பமாக்கி, மிரட்டல் விடுத்த இளைஞர் மீது 'போக்சோ' வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து, நீதிமன்றக் காவலில் வைத்தனர்.