பலாத்காரம் செய்து சிறுமியை கொல்ல முயன்ற வாலிபர் கைது
பலாத்காரம் செய்து சிறுமியை கொல்ல முயன்ற வாலிபர் கைது
ADDED : ஜூன் 23, 2024 06:32 AM

ராய்ச்சூர்: பலாத்காரம் செய்ததுடன், கல்லால் அடித்து சிறுமியை கொலை செய்ய முயன்ற, வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராய்ச்சூர் லிங்கசுகூர் குண்டா சாகர் கிராமத்தில் வசிப்பவர் பசவராஜ் அடப்பூர், 27. நேற்று முன்தினம் இரவு, ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இடத்தில், இயற்கை உபாதை கழிக்க சென்றார்.
அப்போது அங்கு 15 வயது சிறுமி ஒருவர், இயற்கை உபாதை கழிக்க, தனியாக வந்தார். திடீரென அந்த சிறுமியின் வாயை, பசவராஜ் துணியால்மூடினார்.
புதருக்குள் இழுத்துச் சென்று பலாத்காரம் செய்தார். இதுகுறித்து சிறுமி வெளியே கூறிவிடுவார் என்ற பயத்தில் அங்கு கிடந்த கல்லை எடுத்து, சிறுமியின் தலையில் தாக்கினார். ஆனால் பசவராஜை பிடித்து தள்ளி விட்டுவிட்டு, சிறுமி அங்கிருந்து தப்பி வீட்டிற்குச் சென்றார். பெற்றோரிடம் நடந்த சம்பவம் பற்றி கூறி கதறி அழுதார்.
அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பசவராஜ் மீது லிங்கசுகூர் போலீசில் புகார் செய்தனர். அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணைநடக்கிறது.