ADDED : மார் 12, 2025 10:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காடு மாவட்ட எஸ்.பி., அஜித்குமார் அறிவுரையின்படி, ஏ.எஸ்.பி., ராஜேஷ்குமார், மேற்கு போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் விபின் வேணுகோபால் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் இரவு பாலக்காடு ரயில்வே ஸ்டேஷன் அருகே ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகிக்கும் வகையில் அங்கு காத்திருந்த இளைஞரிடம் நடத்திய சோதனையில், 20 கிராம் எம்.டி.எம்.ஏ., என்றழைக்கப்படும் போதை மாத்திரை இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து நடத்திய விசாரணையில், அவர், ஆலப்புழா மாவட்டம், செங்கன்னூர் பகுதியைச் சேர்ந்த சைரஸ், 23, என்பதும், போதை மாத்திரை விற்பனை செய்வதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், யாரிடமிருந்து போதை மாத்திரை வாங்கினார் என, விசாரிக்கின்றனர்.