வாக்காளர் பட்டியலில் பெயர் 'மிஸ்ஸிங்' குடும்பத்துடன் வாலிபர் போராட்டம்
வாக்காளர் பட்டியலில் பெயர் 'மிஸ்ஸிங்' குடும்பத்துடன் வாலிபர் போராட்டம்
ADDED : ஏப் 25, 2024 04:36 AM

சாம்ராஜ் நகர் : கர்நாடகாவில் நாளை முதல் கட்டமாக 14 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. முதல்கட்டத்தில் சாம்ராஜ் நகர் லோக்சபா தொகுதியும் இடம் பெற்றுள்ளது.
இந்த தொகுதிக்கு உட்பட்ட மாரதள்ளி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பலிமேடு கிராமத்தைச் சேர்ந்த மருது, இரண்டு நாட்களுக்கு முன்பு, வாக்காளர் பெயர் பட்டியலை சரிபார்த்தபோது, அவரது பெயர் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து அவர், தனது தாய், மனைவியுடன் நேற்று மாரதள்ளி கிராம பஞ்சாயத்து அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் கூறுகையில், ''வாக்காளர் பட்டியலில் எனது பெயர் நீக்கப்பட்டது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டேன்.
''அதற்கு அவர்கள், அங்கன்வாடி ஊழியரின் பெயரை நீக்குவதற்கு பதிலாக, எனது பெயரை தவறுதலாக நீக்கிவிட்டதாக தெரிவித்தனர்.
''எனது ஓட்டு, என் உரிமை. எனக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன்,'' என்றார்.
மாரதள்ளி கிராம பஞ்சாயத்து முன் தனது குடும்பத்துடன் போராட்டம் நடத்திய மருது. இடம்: சாம்ராஜ் நகர்.

