ரயில் தண்டவாளத்தில் விபரீத வீடியோ எடுத்த யூடியுப்பர் கைது
ரயில் தண்டவாளத்தில் விபரீத வீடியோ எடுத்த யூடியுப்பர் கைது
ADDED : ஆக 03, 2024 02:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ரயில் தண்டவாளத்தில் சைக்கிள், கற்கள், சிலிண்டர்களை , சோப்பு ஆகியவற்றை வைத்து வீடியோ எடுத்து விபரீத செயலில் ஈடுபட்ட யூடியுப்பர் மீது வழக்குபதிந்து போலீசார் கைது செய்தனர்.
உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தைச்சேர்ந்த யூடியுப்பர் குல்சார் ஷேக் இவர் லால் கோபால்கஞ்ச் என்ற இடத்தில் ரயில் தண்டவாளத்தின் மீது சிறிய சைக்கிள், மற்றும் கற்கள், சோப்பு ,சிறிய இரும்பு துண்டு என வைத்து ரயில் அதன் மீது செல்லும் போது வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினார்.
வீடியோ வைரலானதை அடுத்து குல்சார் ஷேக் செயலால் பெரும் ரயில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அவரது விபரீத செயலை தடுத்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரினர். போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.