திரிவேணி சங்கமத்தில் ஒரே நாளில் 1 கோடி பக்தர்கள் புனித நீராடல்
திரிவேணி சங்கமத்தில் ஒரே நாளில் 1 கோடி பக்தர்கள் புனித நீராடல்
UPDATED : ஜன 15, 2026 12:38 AM
ADDED : ஜன 15, 2026 12:29 AM

பிரயாக்ராஜ்: உத்தர பிரதேசத்தில் , மகர சங்கராந்தியையொட்டி, நேற்று ஒரே நாளில் பிரயாக்ராஜில் பாயும் திரிவேணி சங் கமத்தில் 1 கோடி பக்தர்கள் புனித நீராடினர்.
உ.பி.,யில் மகர மேளா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கொண்டாடப்படுகிறது. பிரயாக்ராஜில் கடந்த 3ம் தேதி துவங்கி, பிப்., 15 வரை நடக்கும் இந்த நிகழ்வில், புனித நீராடுவது முக்கிய அம்சம்.
இந்த கால கட்டத்தில் கங்கை, யமுனை, மற்றும் புராண நதியான சரஸ்வதி பாய்வதாக கருதப்படும் திரிவேணி சங்கமத்தில், புனித நீராடுவதை பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில், அறுவடைத்திருவிழாவான சங்கராந்தி உத்தர பிரதேசத்தில் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நேற்று திரிவேணி சங்கமத்தில் 1 கோடி பக்தர்கள் புனித நீராடினர்.
இதுகுறித்து பிரயாக்ராஜ் எஸ்.பி., நீரஜ் பாண்டே கூறிய தாவது:
மகர மேளாவிற்காக உடை மாற்றும் அறைகள், கழிப்பறைகள் போன்ற அடிப்படை வசதிகளுடன் 12,100 அடி நீளமுள்ள நீராடும் படித்துறைகள் கட்டப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 1 கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.
இவ்வாறு அவர் கூறினார்.

