ஒடிசாவில் பயணிகள் ரயிலின் 11 பெட்டிகள் தடம்புரண்டன: ஒருவர் உயிரிழப்பு
ஒடிசாவில் பயணிகள் ரயிலின் 11 பெட்டிகள் தடம்புரண்டன: ஒருவர் உயிரிழப்பு
UPDATED : மார் 30, 2025 06:20 PM
ADDED : மார் 30, 2025 02:30 PM

புவனேஸ்வர்: ஒடிசாவில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானது. இச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். எட்டு பேர் காயமடைந்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து அசாமின் காமாக்யா நகரை நோக்கி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டு இருந்தது. இந்த ரயில், ஒடிசாவின் கட்டாக் - நெருகண்டி இடையே சென்று கொண்டு இருந்த போது, ரயிலின் 11 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்கு உள்ளாகியது. இச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.
தகவல் அறிந்த மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ரயில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது. மாற்று ரயில் அனுப்பி வைக்கப்பட்டு, பயணிகள் அழைத்து வரப்பட்டனர்.
விபத்து காரணமாக, அந்த வழியாக செல்ல வேண்டிய மூன்று ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.