காஷ்மீரை கதிகலங்க வைக்கும் மறதி நோய்: அதிகம் பேர் பாதிப்பு
காஷ்மீரை கதிகலங்க வைக்கும் மறதி நோய்: அதிகம் பேர் பாதிப்பு
ADDED : அக் 18, 2024 12:11 PM

ஜம்மு: காஷ்மீரில் வயதான முதியோர்கள் பலருக்கு அல்சைமர் என்ற மறதி நோய் அதிகம் பாதிக்கப்படுவதாக ஒரு விவர அறிக்கை தெரிவிக்கிறது.
காஷ்மீரில் பல மாவட்டங்களில் 55 வயதுக்கு மேற்பட்டோரை அல்சைமர் நோய் பாதிப்பதால் பலரும் மருத்துவமைனயில் சேர்க்கப்பட்டுள்ளனர். குறிப்பாக முதியோர்களில் 11 சதவீதம் பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10ல் ஒருவருக்கு இந்த நோய் உள்ளது. நாட்டில் அல்சைமர் பாதிப்பில் காஷ்மீர் முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில் உள்ள மொத்த சராசரி பாதிப்பு 7.4 சதவீதம் பேர். ஆனால் காஷ்மீரில் வயதானவர்கள் இதனைவிட பாதிக்கப்படுகின்றனர். டில்லியில் மிக குறைவானவர்களே இந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர். நினைவாற்றல், சிந்தனை தொடர்பான குறைபாடுகள் வரும். வயதானவர்களை வழக்கமாக பாதிக்கும் நோய்தான் இது. நரம்பியில் தொடர்பானதும் கூட.
அல்சைமர் அறிகுறி என்னவாக இருக்கும் ?
01. சாவி மற்றும் வழக்கமாக தினமும் பயன்படுத்தும் பொருட்களை வைத்த இடத்தை மறந்து விடுவர்.
02. இருவர் பேசிக்கொண்டிருக்கும் போது என்ன, என்ன என்று திரும்ப திரும்ப கேள்வி கேட்பர்
03. குழப்பமாகவே இருப்பர், முடிவு எடுக்க சிரமப்படுவர்
04. அன்றாடம் செய்யும் வழக்கமான பணிகளை மறந்து விடுவர்
05. கடந்த கால நிகழ்வை மறந்து விடுவர், பிறர் பெயர்கள் மறதி ஏற்படும்.
06. மேற்கூறிய விஷயங்கள் அதிகரிக்கும் போது முழு அல்சைமர் நிலைக்கு வந்து விடுவர்.