அநியாயம் பண்றீங்களேம்மா... வங்கியில் 10 கோடி மோசடி; கேரள பெண் அதிகாரி கைது!
அநியாயம் பண்றீங்களேம்மா... வங்கியில் 10 கோடி மோசடி; கேரள பெண் அதிகாரி கைது!
ADDED : செப் 19, 2024 08:17 PM

கோழிக்கோடு: கேரளா மாநிலம் கோழிக்கோடு கூட்டுறவு சங்கத்தில் ரூ.10 கோடி நிதியை மோசடி செய்த முன்னாள் கூட்டுறவு சங்க செயலாளர் படிக்கல் கண்டி பிந்து கைது செய்யப்பட்டார்.
கோழிக்கோடு மாவட்டம் பலுச்செரியில் உன்னிகுளம் பெண்கள் கூட்டுறவு சொசைட்டி இயங்கி வருகிறது. இதில் வாடிக்கையாளர்கள் ஏராளமானோர், பணத்தை டிபாசிட் செய்துள்ளனர். கூட்டுறவு சொசைட்டி செயலாளராக இருந்த பிந்து பணியாற்றி வந்தார்.
இவர் வாடிக்கையாளர்களின் பணத்தை கையாடல் செய்து விட்டதாக புகார்கள் எழுந்தன. விசாரித்த கூட்டுறவுத்துறை பிந்துவை சஸ்பெண்ட் செய்தது. வாடிக்கையாளர்களின் டிபாசிட் பணத்தை, போலி ஆவணம் தயார் செய்து சுருட்டிய புகார் உறுதி செய்யப்பட்டது. ஆய்வில் மொத்தம் ரூ.10 கோடி சுருட்டியது கண்டறியப்பட்டது. பணம் பறிபோன வாடிக்கையாளர்கள் பலுசெரி போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தனர். பணத்தை மோசடி செய்து தலைமறைவாக இருந்த பிந்துவை போலீசார் கைது செய்தனர்.
பலுசெரி போலீஸ் அதிகாரி கூறியதாவது: கடந்த 2019ல் இருந்து இந்த கூட்டுறவு சொசைட்டியில் போலி ஆதாரங்களை தயார் செய்து நிதி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
டிபாசிட் செய்துள்ள வாடிக்கையாளர்கள் புகாரின் பேரில் 3 வழக்குகள் பதிவு செய்துள்ளோம். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் கட்சி தனது அதிகாரத்தின் கீழ் இந்த சங்கத்தை வைத்திருக்கிறது. தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் விசாரித்தால், யார் யாருக்கு தொடர்பு, பணத்தை என்ன செய்தார் என்ற விபரங்கள் தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.