கேரளாவில் தெருநாய் கடித்து 10 மான்கள் இறப்பு; திறந்த 14 நாட்களில் மூடப்பட்ட உயிரியல் பூங்கா
கேரளாவில் தெருநாய் கடித்து 10 மான்கள் இறப்பு; திறந்த 14 நாட்களில் மூடப்பட்ட உயிரியல் பூங்கா
ADDED : நவ 14, 2025 01:54 AM
திருச்சூர்: கேரளாவில், தெருநாய் கடித்து, 10 மான்கள் உயிரிழந்த நிலையில், திறந்து, 14 நாட்களே ஆன புத்துார் உயிரியல் பூங்கா மூடப்பட்டது.
கே ரளாவின் திருச்சூரில், முதல்வர் பினராயி விஜயனால் புத்துார் உயிரியல் பூ ங்கா கடந்த மாதம் 28ம் தேதி திறக்கப்பட்டது.
மன அழுத்தம் விலங்குநல டாக்டர்கள், மிருகக்காட்சி வடிவமைப்பாளர்கள் உள்ளிட்டோரின் ஆலோசனைகளுக்கு ஏற்ப நவீன வகையில், புத்துார் உயிரியல் பூங்கா உருவாக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 11ம் தேதி அதிகாலையில், உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 10 மான்கள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில், சில மான்களின் உடல்களில் நாய் கடித்ததற்கான அடையாளங்கள் தென்பட்டன.
ச ம்பவ இடத்தில், தலைமை வன கால்நடை டாக்டர் அருண் ஜக்காரியா தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டது.
விசாரணையில், பூங்காவின் மதிற்சுவரில் இருந்த கு றுகிய ஓட்டை வழியாக வந்த தெருநாய், மான்களை கடித்தது தெரியவந்தது.
இது குறித்து டாக்டர் ஜக்காரியா கூறுகையில், “பூங்காவின் உள்ளே புகுந்த தெருநாய், ஒரு சில மான்களை கடித்துள்ளது. பல மான்கள், பயம் மற்றும் மன அழுத்தம் காரணமாக ஓடியதில் அடி பட்டு உயிரிழந்துள்ள ன,” என்றார்.
இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த, தலைமை வன விலங்கு வார்டன், தலைமை வன கால்நடை அதிகாரி மற்றும் ஒரு மூத்த விஜிலென்ஸ் அதிகாரி அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது-. இந்த குழுவின் முதற்கட்ட அறிக்கை நான்கு நாட்களுக்குள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
விமர்சனம் இறுதி முடிவு இரண்டு வாரங்களுக்குள் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது-. மான்களின் உயிரிழப் பை அடு த்து, புத்துார் உயிரியல் பூங்கா தற்காலிகமாக மூட ப்பட்டுள்ளது.
இது குறித்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
'ஆசியாவிலேயே சிறந்த உயிரியல் பூங்கா என அறிவிக்கப்பட்ட நிலையில், மதிற்சுவர் ஓட்டை வழியாக தெருநாய் நுழைவதை கூட தடுக்க முடியவில்லையா? விலங்குகளின் பாதுகாப்பிற்கு, அடிப்படையான விஷயங்கள் கூட உயிரியல் பூங்காவில் செய்யப்படாதது அதிர்ச்சி அளிக்கிறது' என, பலர் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

