ADDED : ஆக 15, 2025 11:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொல்கட்டா: பீஹாரின் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள மோதிஹாரியைச் சேர்ந்த, 45 பக்தர்கள் மேற்கு வங்க மாநிலத்திற்கு ஆன்மிக சுற்றுலா சென்றனர்.
தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள கங்காசாகரைப் பார்வையிட்டு, பஸ்சில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். பூர்பா பர்த்வான் மாவட்டத்தில் உள்ள பாகுய்பூர் அருகே பஸ் சென்ற போது, சாலை யோரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.
இந்த, கோர விபத்தில் எட்டு ஆண்கள், இரண்டு பெண்கள் என, 10 பேர் உயிரிழந்தனர். ஆறு குழந்தைகள் உட்பட, 35 பேர் காயமடைந்தனர்.