UPDATED : ஜூன் 07, 2025 08:45 PM
ADDED : ஜூன் 07, 2025 04:40 PM

அமராவதி: ஆந்திராவில் எளிதாக தொழில் செய்யவும், முதலீட்டாளர்களை ஈர்க்கவும் அதிகபட்ச வேலை நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. தொழிலாளர் மற்றும் முதலீட்டாளர்கள் நலன் கருதி, இது தொடர்பான சட்டத்தை திருத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக, தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர் பார்த்தசாரதி கூறியதாவது: தொழிலாளர் சட்டங்களைத் முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஆதரவாகத் திருத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஆந்திராவுக்கு அதிக முதலீடு வரும். உலக மயமாக்கல் ஒவ்வொரு மாநிலத்திலும் நடக்கிறது. உலகளாவிய விதிகளை செயல்படுத்த, இந்த திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.
மேலும், இரவு நேரத்திலும் பெண்கள் பாதுகாப்பாக பணியாற்ற ஏதுவாக அமைச்சரவை இரவு நேர வேலை விதிகளையும் தளர்த்தியுள்ளது. இதனால் போக்குவரத்து வசதி, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு போன்ற பாதுகாப்புகளுடன் பெண்கள் வேலை செய்யலாம்.இவ்வாறு பார்த்தசாரதி கூறினார்.