ADDED : செப் 15, 2024 10:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மீரட்: உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் 3 மாடி கட்டடம் இடிந்து 10 பேர் உயிரிழந்தனர்.
மீரட்டின் ஜாகிர் காலனி பகுதியில் நேற்று அந்த கட்டடம் இடிந்து விழுந்தது. தகவல் அறிந்ததும், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் விரைந்து வந்து, இடிபாடுகளில் சிக்கிய 15 பேரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 14 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அதில் 9 பேர் உயிரிழந்தனர்.இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உ.பி.,யில் கடந்த சில நாட்களாக கனமழை பெ ய்து வருகிறது. இதன் காரணமாக இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்து உள்ளது.