தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ லாரி மீது வேன் மோதி உ.பி.,யில் 10 பேர் பலி

 லாரி மீது வேன் மோதி உ.பி.,யில் 10 பேர் பலி

 லாரி மீது வேன் மோதி உ.பி.,யில் 10 பேர் பலி


ADDED : மே 19, 2026 12:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 19, 2026 12:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

லக்கிம்பூர் கேரி: உத்தர பிரதேசத்தின் சிசாயா - லக்கிம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது வேன் மோதியதில், 10 பேர் உயிரிழந்தனர்.

உ.பி.,யின் லக்கிம்பூரில் இருந்து சிசாயா நோக்கி, ஒன்பது பயணியரை ஏற்றி கொண்டு வேன் ஒன்று நேற்று சென்றது. உஞ்ச்கான் - பரேத்தா கிராமங்கள் இடையே சென்ற வேன் எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில், வேன் டிரைவர் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உடல்கள் சிதைந்து காணப்பட்ட நிலையில், பஹ்ரைச் மாவட்டத்தை சேர்ந்த ஜெய்தீப் சிங், 25, பவான், 23, சோஹன், 21, ராம் கோயல், 42, சகாஜ்ராம், 35, பாப்பு, 18, மற்றும் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தை சேர்ந்த அத்னன் கான், 15, ஆகிய ஏழு பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. மற்ற மூவரை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடக்கிறது.

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா, பிரஜேஷ் பதக் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அவர்களது குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா, 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us