தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ அடுக்குமாடியில் தீ 10 பேர் மீட்பு

அடுக்குமாடியில் தீ 10 பேர் மீட்பு

அடுக்குமாடியில் தீ 10 பேர் மீட்பு


ADDED : அக் 08, 2024 08:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 08, 2024 08:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:வடகிழக்கு டில்லி சாஸ்திரி பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று காலை தீ விபத்து ஏற்பட்டது. கட்டடத்தில் இருந்து 10 பேரை தீயணைப்புப் படையினர் மீட்டனர்.

சாஸ்திரி பூங்கா மூன்றாவது சந்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் தரைத் தளத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நேற்று காலை 9:00 மணிக்கு தீப்பற்றியது. மளமளவென அடுத்தடுத்த தளங்களுக்கு பரவியது. அங்கு வசித்தவர்கள் உடனடியாக கீழே இறங்கினர்.

தகவல் அறிந்து 5 வண்டிகளில் தீயணைப்புப் படையினர் வந்தனர். ஏணி மற்றும் கிரேன் பயன்படுத்தி மேல் தளங்களில் சிக்கியிருந்த 10 பேரை மீட்டனர். அங்கு வசித்த டாக்டர் தஹ்ஜீப் அகமது, “இந்தக் கட்டடத்தில் ஒன்பது குடும்பங்கள் தங்கியிருக்கின்றன. வாகன நிறுத்துமிடதில் உள்ள மின்சார மீட்டரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பற்றி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது,”என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us