எல்லைக்கோட்டை தாண்டாதீங்க... எமன்கிட்ட போகாதீங்க: இதயம் கவர்ந்த இந்துார் சிறுவன்!
எல்லைக்கோட்டை தாண்டாதீங்க... எமன்கிட்ட போகாதீங்க: இதயம் கவர்ந்த இந்துார் சிறுவன்!
ADDED : ஆக 18, 2024 11:35 AM

இந்தூர்: இந்தூரில், போக்குவரத்து சிக்னலில் நின்று பாட்டுப்பாடி விதிகளை பின்பற்றுமாறு கூறி வரும் சிறுவனின் செயல், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
புள்ளி விவரம்
ஆண்டுதோறும் சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. விபத்துகளை கட்டுப்படுத்த சாலை கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வந்தாலும், விதிகளை மீறுவதால் நடைபெறும் விபத்துகளின் எண்ணிக்கை குறையவில்லை என்கிறது புள்ளி விவரம்.10 வயது சிறுவன்
சாலை விதிகளை மதித்தால் விபத்துகளை தவிர்க்கலாம் என அரசாங்கம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், விபத்துகள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 10 வயது சிறுவன் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி, வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வை ஊட்டும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.வேற லெவல்
அந்த சிறுவனின் பெயர் ஆதித்யா திவாரி. தினமும் போக்குவரத்து அதிகம் காணப்படும் ஒரு சிக்னலில் நின்றுகொண்டு அங்கு வரும் வாகன ஓட்டிகளிடம் விதிகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறார். பச்சை வண்ண தொப்பி அணிந்து, காதில் மைக் ஒன்றையும் மாட்டிக் கொண்டு சிக்னலில் நிற்கும் சிறுவனின் விழிப்புணர்வு வேற லெவலில் இருக்கிறது.வெள்ளைக்கோடு
சாலையின் ஒரு முனையில் இருந்து, மறுமுனைக்கு மெல்ல, மெல்ல நடந்தபடியே விதிகளை பின்பற்றுங்கள், வாகனத்தை வேகமாக இயக்காதீர்கள் என்று அறிவுறுத்துகிறார். சிறுவன் தானே என்று ஏதோ ஒரு ஞாபகத்தில் செல்ல நினைப்பவர்களை அணுகி, வாகனத்தை வெள்ளைக்கோட்டை தாண்டாமல் நிறுத்துமாறு அட்வைஸ் செய்கிறார்.பாடல்கள்
இதுபோதாது என்று, தாமே சுயமாக எழுதிய விழிப்புணர்வு பாடல்களை பாடி வாகன ஓட்டிகளை திரும்பி பார்க்க வைக்கிறார் ஆதித்யா திவாரி. ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓட்ட வேண்டாம் என்றும் இருகரம் கூப்பி கேட்டுக் கொள்கிறார்.கைதட்டி வரவேற்பு
சிறுவனின் செயலைக் காணும் வாகன ஓட்டிகளில் பாடலைக் கேட்டு ரசித்துச் செல்கின்றனர். அங்குள்ள போக்குவரத்து போலீசாரும் சிறுவன் ஆதித்யா திவாரியை ஊக்கப்படுத்தி, கைகளைத் தட்டி வரவேற்கின்றனர். விளையாட வேண்டிய வயதில் இப்படி வீதியில் வெய்யிலில் போக்குவரத்து விதிகளை மதிக்க வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்துவதை பலரும் பாராட்டிச் செல்கின்றனர்.