கேரள அரசு பஸ்கள் தள்ளாடுது ! மது அருந்திய டிரைவர்கள் டிஸ்மிஸ் !
கேரள அரசு பஸ்கள் தள்ளாடுது ! மது அருந்திய டிரைவர்கள் டிஸ்மிஸ் !
UPDATED : ஏப் 18, 2024 12:04 PM
ADDED : ஏப் 18, 2024 10:55 AM

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில் மது அருந்தி விட்டு அரசு பஸ் ஓட்டிய டிரைவர்கள், நடத்துனர்கள் பலர் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.
கேரள மாநிலத்தில் குடிப்பழக்கம் அதிகரித்து வருகிறது. இதில் கேரள அரசு பஸ்களில் டிரைவர்கள் மது அருந்தி பணிக்கு வருவதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ்குமார் உத்தரவின்படி அரசு பஸ்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
கடந்த ஒரு வாரத்தில் நடந்த சோதனையில் 100 பேர் சிக்கினர். இதில் டிரைவர்கள், நடத்துனர்கள் மது அருந்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நிரந்தர பணியாளர்களான 74 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தற்காலிக பணியாளர்கள் 26 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தற்போது கேரளாவில் பரபரப்பாக பேசப்படுகிறது.

