வெற்றி எனக்குத்தான்: சொல்லிக்கொள்கிறார் சுதர்சன் ரெட்டி
வெற்றி எனக்குத்தான்: சொல்லிக்கொள்கிறார் சுதர்சன் ரெட்டி
ADDED : செப் 05, 2025 10:08 PM

கவுகாத்தி: துணை ஜனாதிபதி தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெறுவது உறுதி என்று இண்டி கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
கவுகாத்தியில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டி:
இந்த தேர்தலில் நான் 100 சதவீதம் வெற்றி பெறுவது உறுதி. நான் எங்கே சென்றாலும் அங்கு எனக்கு பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.
மற்ற வேட்பாளரை பற்றி கருத்துக் கூறுவது முறையற்றது. அவர் (ஆளும்கட்சி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன்) மிகவும் மரியாதைக்குரிய நபரும் கூட.
இவ்வாறு பி. சுதர்சன் ரெட்டி கூறினார்.
செப்.9ம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் நிறுத்தப்பட்டு உள்ளார். எதிர்க்கட்சிகளின் இண்டி கூட்டணி வேட்பாளராக ஓய்வு பெற்ற சுப்ரீம்கோர்ட் நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி களம் இறங்கி உள்ளார்.