sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

1,000 ரூபாய் திட்டம் அக்டோபரில் நடைமுறை

/

1,000 ரூபாய் திட்டம் அக்டோபரில் நடைமுறை

1,000 ரூபாய் திட்டம் அக்டோபரில் நடைமுறை

1,000 ரூபாய் திட்டம் அக்டோபரில் நடைமுறை


ADDED : மார் 05, 2024 11:07 PM

Google News

ADDED : மார் 05, 2024 11:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:''பெண்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் செப்டம்பர் அல்லது அக்டோபரில் செயல்பாட்டுக்கு வரும்,'' என, டில்லி நிதியமைச்சர் அதிஷி சிங் கூறினார்.

டில்லி சட்டசபையில் நேற்று முன் தினம் -பட்ஜெட் தாக்கல் செய்த அதிஷி, 18 வயது நிறைவடைந்த பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்.

இந்த திட்டம் தொடர்பாக, அதிஷி நேற்று கூறியதாவது:

டில்லியில் முக்ய மந்திரி மகிளா சம்மான் யோஜனா திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம், லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் நீக்கப்பட்ட பின், செப்டம்பர்- அல்லது அக்டோபர் மாதத்தில் செயல்படுத்தப்படும்.

ஆம் ஆத்மி கட்சி வலுவாகவே இருக்கிறது. லோக்சபா தேர்தலில் டில்லி மற்றும் பஞ்சாபில் பா.ஜ.,வை நேரடியாகவே எதிர்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us