உள்ளடக்கத்திற்கு செல்ல
கேதார்நாத்தில் நிலச்சரிவு 10,000 பக்தர்கள் மீட்பு
கேதார்நாத்தில் நிலச்சரிவு 10,000 பக்தர்கள் மீட்பு
ADDED : மே 20, 2026 11:01 PM
அ நிறம் | அளவு
ருத்ரபிரயாக்: உத்தரகண்டில் உள்ள கேதார்நாத் உள்ளிட்ட நான்கு கோவில்களுக்கு பக்தர்கள் புனித பயணம் செல்லும், 'சார் தாம்' யாத்திரை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள கேதார்நாத் கோவில் செல்லும் வழியில், நேற்று முன்தினம் இரவு திடீரென கனமழை பெய்தது.
இதனால் சோன்பிரயாக் - கவுரிகுண்ட் இடையே மலைப்பாதையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதால் புனித யாத்திரை தடைபட்டது.
கேதார்நாத் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் மற்றும் அங்கிருந்து திரும்பிக்கொண்டிருந்தவர்கள் என 10,000க்கும் மேற்பட்டோர் வழியில் சிக்கினர்.
அவர்களை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.
