ஒரே நாளில் 101 பேர் பிடிபட்டனர் ரூ.25 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்
ஒரே நாளில் 101 பேர் பிடிபட்டனர் ரூ.25 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்
ADDED : மே 24, 2025 12:09 AM
சண்டிகர்:பஞ்சாபில், 101 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டு, 15.9 கிலோ ஹெராயின், 102 கிலோ ஓபியம் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் மதிப்பு, 25.52 லட்சம் ரூபாய்.
பஞ்சாப் டி.ஜி.பி., கவுரவ் யாதவ் கூறியதாவது:
பஞ்சாப் மாநிலத்தில், 'யுத் நாஷியன் விருத்' எனப்படும் போதைப் பொருளுக்கு எதிரான போர் என்ற பெயரில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் போரின், 82வது நாளான நேற்று முன் தினம், மாநிலம் முழுதும் 460 இடங்களில் 1,300 போலீசார் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 101 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 15.9 கிலோ ஹெராயின், 102 கிலோ ஓபியம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் சர்வதேச மதிப்பு, 25.52 லட்சம் ரூபாய். கடந்த 82 நாட்களில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 12,650 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
போதைப்பொருள் இல்லாத பஞ்சாப் மாநிலத்தை உருவாக்க முதல்வர் பகவந்த் மான் உத்தரவிட்டதை தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கையை கண்காணிக்க நிதி அமைச்சர் ஹர்பால் சிங் சீமா தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.