ADDED : பிப் 06, 2025 11:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தில்ஷாத் கார்டன்:டில்லி சட்டசபைத் தேர்தலையொட்டி, 1,098 விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சட்டசபைத் தேர்தலையொட்டி நடத்தை விதிகள் ஜனவரி 7ம் தேதி அமலுக்கு வந்தன. அன்று முதல் நேற்று முன்தினம் வரை பல்வேறு விதிமீறல் தொடர்பாக 1,098 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
மொத்தம் 35,020 பேர் கைது செய்யப்பட்டனர். 472 சட்டவிரோத துப்பாக்கிகள், 534 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், 1,14,699 லிட்டர் மது, 77.9 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள 206.712 கிலோ போதைப்பொருட்களும், 1,200க்கும் மேற்பட்ட தடைசெய்யப்பட்ட ஊசி மருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 11.70 கோடி ரூபாய் ரொக்கம், 37.39 கிலோ வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டன.