லாரி மீது வேன் மோதியதில் குழந்தைகள் உட்பட 11 பேர் பலி
லாரி மீது வேன் மோதியதில் குழந்தைகள் உட்பட 11 பேர் பலி
ADDED : ஆக 14, 2025 12:23 AM
ஜெய்ப்பூர்:ராஜஸ்தானில் நின்றிருந்த லாரி மீது, 'பிக் - அப்' வேன் மோதிய விபத்தில் ஏழு குழந்தைகள் உட்பட 11 பேர் பலியாகினர்.
உத்தர பிரதேசத்தின் எட்டாவா மாவட்டம் அஸ்ருலி கிராமத்தை சேர்ந்த 11 குடும்பங்களை சேர்ந்த 20 பேர் பிக் அப் வேனில் ராஜஸ்தான் மாநிலம் டவ்சா மாவட்டத்திற்கு சென்றனர். அங்குள்ள காட்டு ஷியாம் மற்றும் சலசார் பாலாஜி கோவிலில் தரிசனம் செய்து விட்டு நேற்று அதிகாலை சொந்த ஊர் திரும்பினர்.
மனோகர்புர் நெடுஞ்சாலையில் வேன் சென்றபோது சர்வீஸ் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதியது. இதில், ஏழு குழந்தைகள் மற்றும் நான்கு பெண்கள் என மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர்; எட்டு பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெறுகின்றனர்.
சம்பவ இடத்துக்கு வந்த கலெக்டர் பிரேம் ரஞ்சன் சிங், உயிரிழந்தோர் உடல்களை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்தார். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய சிறப்பு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.