ADDED : நவ 28, 2024 05:26 AM

மைசூரு : பள்ளி மாணவர்கள் சுற்றுலா சென்ற அரசு பஸ் கவிழ்ந்து, 11 மாணவர்கள் காயமடைந்தனர்.
பெலகாவி கானாபூரில் உள்ள சாந்திநிகேதன் பள்ளியின் 36 மாணவர்கள், என்.டபிள்யூ.கே.ஆர்.டி.சி., எனும் வடமேற்கு கர்நாடக போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான பஸ்சில் மைசூருக்கு, நேற்று முன்தினம் சுற்றுலா வந்தனர்.
மைசூரில் பல சுற்றுலா இடங்களை மகிழ்ச்சியுடன் பார்த்தனர். இரவில், பெலகாவிக்கு அதே பஸ்சில் புறப்பட்டனர். மைசூரு எல்லையில், பெங்களூரு - மைசூரு சாலையில் சென்று கொண்டிருந்தபோது, சாலைத் தடுப்பி மோதியது.
இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த 11 மாணவர்கள் காயமடைந்தனர்.
இவர்கள், கே.ஆர்.மருத்துவமனை, மணிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு மைசூரு போலீஸ் கமிஷனர் சீமா லட்கர் விரைந்து சென்று விசாரித்தார். காயமடைந்த மாணவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர். நேற்று காலையில் அனைவரும் மாற்று அரசு பஸ் மூலம் பெலகாவிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
நரசிம்மராஜா போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.