sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பஹல்காம் வேட்டையின் அடுத்த இலக்கு: தேடப்படும் 11 பயங்கரவாதிகள் இவர்கள்தான்!

/

பஹல்காம் வேட்டையின் அடுத்த இலக்கு: தேடப்படும் 11 பயங்கரவாதிகள் இவர்கள்தான்!

பஹல்காம் வேட்டையின் அடுத்த இலக்கு: தேடப்படும் 11 பயங்கரவாதிகள் இவர்கள்தான்!

பஹல்காம் வேட்டையின் அடுத்த இலக்கு: தேடப்படும் 11 பயங்கரவாதிகள் இவர்கள்தான்!

10


UPDATED : மே 14, 2025 06:37 PM

ADDED : மே 14, 2025 12:30 PM

Google News

UPDATED : மே 14, 2025 06:37 PM ADDED : மே 14, 2025 12:30 PM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட மேலும் 11 பேர் யார், யார் என்ற விவரம் வெளியாகி இருக்கிறது.

ஜம்முகாஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளில் 3 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலை அரங்கேற்ற உள்ளூர் மக்கள் பலரும் உதவியிருக்கலாம், உள்ளூர் பயங்கரவாதிகளின் ஒத்துழைப்பின்றி எதுவும் நடக்காது என்று உறுதியுடன் நம்பி உள்ள உளவுத்துறை மேலும் 11 பயங்கரவாதிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த 11 பேரும் பஹஸ்காம் தாக்குதலில் தொடர்புடையவர்கள். அவர்கள் யார் என்ற பெயர் விவரங்களும் வெளியிடப்பட்டு உள்ளன. 11 பயங்கரவாதிகளுக்கு வயது 20 முதல் 40 வயது வரை இருக்கும்.

பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளில் பயங்கரவாதிகளுக்கு உதவி இருக்கின்றனர். ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது ஆகிய இயக்கங்களுடன் தொடர்பில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

11 பேரில் 3 பேர் ஹிஸ்புல் முஜாகிதீன், 5 பேர் லஷ்கர் இ தொய்பா, 3 பேர் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்துடன் தொடர்பு உள்ளவர்கள். அவர்களின் முழு பெயர் விவரங்கள்;

அடில் ரஹ்மான் டென்ட்டூ: 21 வயது கொண்ட இவன், லஷ்கர் இ தொய்பா இயக்கத்தில் 2021ம் ஆண்டு தம்மை இணைத்துக் கொண்டான். லஷ்கர் இ தொய்பாவின் சோபூர் மாவட்ட தலைவன் என்று கூறிக்கொள்பவன்.

ஆசிப் அகமது ஷேக்(வயது28); இவர் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவன். அந்த இயக்கத்தின் அவந்திபுரா தலைவன் என்று கூறிக்கொள்பவன். 2022ம் ஆண்டு முதல் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறான்.

ஜூபைர் அகமதுவனி(வயது39); இவனுக்கு அபு உபைதா, உஸ்மான் என்ற இருவேறு பெயர்களும் உண்டு. ஹிஸ்புல் முஜாகதீன் இயக்கத்தின் அனந்த்நாக் மாவட்ட தலைவன் என்று கூறிக்கொள்பவன். ஏ பிளஸ் பயங்கரவாதியாக அடையாளம் காணப்பட்டவன். 2018ம் ஆண்டு முதல் பாதுகாப்பு படையினருக்கு எதிரான தாக்குதலில் தொடர்பு உடையவன்.

ஹரிஷ் நசிர் (வயது 20); 2023 முதல் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தில் இருப்பவன்.

நசீர் அகமதுவனி(வயது 21); 2019 முதல் சோபியான் பகுதியில் நடத்தப்பட்ட பல தாக்குதல்களில் தொடர்புடையவன். லஷ்கர் இ தொய்பா இயக்கத்தில் உள்ள இவன், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்தவன்.

ஆமிர் அகமது தர்; 2023ம் ஆண்டு முதல் சோபியான் பகுதியில் தமது பயங்கரவாத நடவடிக்கையை தொடங்கியவன். இவனும் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தில் இருந்த படியே பாக். பயங்கரவாதிகளுக்கு உதவி செய்தவன்.

ஆசிப் அகமது கண்டே(வயது 24) 2015ம் ஆண்டில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பில் இணைந்தவன்.

ஆமிர் நசிர்வனி(வயது 20); 2024ம் ஆண்டு முதல் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தில் செயல்பட்டு வருபவன். புல்வாமா பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத செயல்களில் தொடர்புடையவன்.

யாவர் அகமதுபட்; இவரின் நடாட்டம் என்பது புல்வாமா பகுதியில் தான். 2024ல் முதல் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தில் செயல்பட்டு வருபவன்.

ஹரூண் ரஷித் கனய்(வயது 32); அனந்த்நாக் பகுதி ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி. 2018ம் ஆண்டுவாக்கில், பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத பயற்சி எடுத்தவன். தெற்கு காஷ்மீர் பகுதிக்கு அண்மையில் வந்து சென்றுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

ஜாகிர் அகமது கனி(வயது 29); இவன் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் குல்ஹாம் மாவட்டத்தின் முக்கிய பயங்கரவாதி. பாதுகாப்பு படையினர் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்துபவன்.






      Dinamalar
      Follow us