ADDED : அக் 09, 2024 04:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹரியானாவில் மொத்தமுள்ள 90 இடங்களில் பா.ஜ., 48ல் வென்று ஆட்சியை தக்க வைத்தது. காங்., 37ல் வென்றது. பா.ஜ., 55,48,800 ஓட்டுகளும், காங்., 54,30,602 ஓட்டுகளும் பெற்றன. 1,18,198 ஓட்டுகளில் காங், ஆட்சியை இழந்தது.
மாறிய கொண்டாட்டம்!
ஓட்டு எண்ணிக்கை துவங்கிய உடன், காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை பெற்று வந்தது. இதையடுத்து, சண்டிகர் உட்பட முக்கிய நகரங்களில் உள்ள கட்சி அலுவலகத்தில் மக்கள் கூடினர். மேளங்கள் முழங்கி, பட்டாசுகள் வெடித்து, இனிப்புகளை பகிர்ந்து கொண்டனர்.
ஓட்டு எண்ணிக்கை துவங்கி இரண்டு மணி நேரம் கடந்த நிலையில், நிலைமை தலைகீழாக மாறியது. பா.ஜ., முன்னிலை பெறத் துவங்கியது. இதையடுத்து, காங்கிரஸ் அலுவலகங்களில் கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டன. பா.ஜ., அலுவலகங்களில் கொண்டாட்டங்கள் துவங்கின.

