ADDED : ஜன 01, 2025 12:46 AM

கன்னடர் - தமிழர் ஒற்றுமை மாநாடு
பெங்களூரு அரண்மனை மைதானத்தில் கடந்த அக்டோபர் 20ம் தேதி, தாய்மொழி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ்.டி.,குமார் தலைமையில், கன்னடர் - தமிழர் ஒற்றுமை மாநாடு நடந்தது. இதில் கர்நாடக ரக் ஷன வேதிகே அமைப்பின் தலைவர் நாராயண கவுடா கலந்து கொண்டு, கன்னடர் - தமிழர் ஒற்றுமை பற்றி பேசியது சிறப்பாக அமைந்தது.
=======
தமிழ் புத்தக திருவிழா
கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் டிசம்பர் 20 முதல் 29ம் தேி வரை 10 நாட்கள், பெங்களூரு சிவாஜி நகர் அம்பேத்கர் வீதியில் உள்ள தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியர்ஸ் வளாகத்தில், தமிழ் புத்தக திருவிழா நடத்தப்பட்டது. புத்தகம் வாசிப்பு பழக்கம் உள்ளவர்கள் தாக்கத்தை போக்க நடந்த, இந்த திருவிழாவில் தமிழர்கள் குடும்பம், குடும்பமாக கலந்து கொண்டனர். புத்தகங்களை அள்ளி சென்றனர்.
**

