ராஜஸ்தானில் பஸ், டெம்போ மோதிய விபத்து; 8 குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழப்பு
ராஜஸ்தானில் பஸ், டெம்போ மோதிய விபத்து; 8 குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழப்பு
ADDED : அக் 20, 2024 11:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் பஸ்சும், டெம்போவும் மோதிக் கொண்டதில் 8 குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர்.
குவாலியரில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கிச் ஸ்லீப்பர் கோச் பஸ் ஒன்று வேகமாக சென்று கொண்டு இருந்தது. சுமிபூர் அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், டெம்போ மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இர்பான் என்கிற பூந்தி (38), அவரது மனைவி ஜூலி (34) மற்றும் 8 குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பஸ் டிரைவர் அதிக வேகமாக வந்ததே விபத்துக்கு காரணம் என்று போலீஸ் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.