சத்தீஸ்கரில் என்கவுன்டர்: 12 நக்சல்கள் சுட்டுக்கொலை
சத்தீஸ்கரில் என்கவுன்டர்: 12 நக்சல்கள் சுட்டுக்கொலை
UPDATED : ஜன 16, 2025 10:07 PM
ADDED : ஜன 16, 2025 07:50 PM

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 12 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கரில் நக்சல்கள் நடமாட்டம் உள்ளது. அங்கு பாதுகாப்பு படையினருக்கும், நக்சல் இடையே அடிக்கடி மோதல் நீடித்து வருகிறது. கடந்த 12ம் தேதி பிஜாப்பூர் மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் 5 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இன்று(ஜன.,16) பிஜாப்பூர் மாவட்டத்தில் நக்சல்கள் ஐஇடி வகை வெடிகுண்டு மூலம் நடத்திய தாக்குதலில் இரண்டு பாதுகாப்பு படையினர் காயமடைந்தனர்.
இந்நிலையில், இன்று காலை தெற்கு பிஜாப்பூர் வனப்பகுதியில் ,மாவட்ட வன பாதுகாப்பு படையினர், அதிவிரைவுப்படையினர் மற்றும் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் இணைந்து நக்சல்களை தேடும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது இரு தரப்புக்கு இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த மோதல் மாலை வரை நீடித்தது. இதில் 12 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினர் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. தொடர்ந்து, அங்கு மோதல் நீடித்து வருவதாக தெரியவந்துள்ளது.