மஹா.,வில் 6 நாளில் 12 பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி சூறாவளி பிரசாரம்
மஹா.,வில் 6 நாளில் 12 பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி சூறாவளி பிரசாரம்
UPDATED : நவ 05, 2024 10:19 PM
ADDED : நவ 05, 2024 10:16 PM

மும்பை: மஹாராஷ்டிராவில் பிரதமர் மோடி வரும் 8 ம் தேதி முதல் 14 ம் தேதி வரை 12 பொதுக்கூட்டங்களில் உரையாற்ற உள்ளார்.
மஹாராஷ்டிரா சட்டசபைக்கு நவ.,20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் பா.ஜ., கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக உள்ளார். இங்கு ஆட்சியை தக்க வைப்பதற்காக பா.ஜ., மும்முரமாக உள்ளது. இதற்காக அக்கட்சி, தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து நவ.,08 முதல் 14 வரை பிரதமர் மோடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.
62 தொகுதிகள் கொண்ட விதர்பா பகுதியிலும்,
46 தொகுதிகளை கொண்ட மரத்வாடா பகுதியிலும்
72 தொகுதிகளை உள்ள மாநிலத்தின் மேற்கு தொகுதியிலும் பிரதமரின் பொதுக்கூட்டங்கள் நடக்க உள்ளன. இந்தக் கூட்டங்களில் மத்திய மாநில அரசுகளின் சாதனைகளை பட்டியலிட உள்ள பிரதமர், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதில் அளிக்க உள்ளார்.

