தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ குடற்புழு நீக்க மாத்திரை சாப்பிட்ட 120 மாணவர்கள் 'அட்மிட்'

 குடற்புழு நீக்க மாத்திரை சாப்பிட்ட 120 மாணவர்கள் 'அட்மிட்'

 குடற்புழு நீக்க மாத்திரை சாப்பிட்ட 120 மாணவர்கள் 'அட்மிட்'


ADDED : பிப் 12, 2026 01:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 01:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மெயின்புரி: உத்தர பிரதேசத்தில், இரு இடங்களில் நடந்த குடற்புழு நீக்க முகாமில் மாத்திரை சாப்பிட்ட 120 மாணவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

நாடு முழுதும், பிப்.,10 மற்றும் ஆக.,10 ஆகிய இரு தினங்கள், குடற்புழு நீக்க நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

தலைவலி இதையொட்டி, உ.பி.,யில் உள்ள பருஹாபாத் மற்றும் மெயின்புரி ஆகிய இரு மாவட்டங்களில், நேற்று முன்தினம் பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க முகாம்கள் நடத்தப்பட்டன.

பருஹாபாதின் கமல்கஞ்ச் தொகுதியில் உள்ள ரதோரா மொகைதின்புர் கிராமத்தில் உள்ள ஜவஹர் லால் பிரேமா தேவி பள்ளியில் நடந்த முகாமில், 150 மாணவர்களுக்கு குடற்புழு நீக்க சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து அவர்களுக்கு, 'அல்பென்டசோல்' என்ற மாத்திரை வழங்கப்பட்டது.

அதை சாப்பிட்ட 100 மாணவர்கள் வாந்தி எடுத்தனர். தலைவலியும் ஏற்பட்டது.

இவர்களில் 33 மாணவர்கள் கமல்கஞ்சில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்துக்கும், மற்ற 67 பேர் மாவட்ட தலை நகரில் உள்ள லோஹியா மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றனர்.

தகவல் அறிந்த கலெக்டர் அசுதோஷ் குமார் திவேதி லோஹியா மருத்துவமனைக்கு சென்று, பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

சிகிச்சை அவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கவும் டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார்.

தற்போது மாணவர்கள் அனைவரும் நலமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதேபோல் மெயின்புரி மாவட்டம் நக்லகீரட்பூரில் உள்ள அரசு பள்ளியில் நடந்த முகாமில், குடற்புழு நீக்க மாத்திரை சாப்பிட்ட 24 மாணவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு உடனடியாக வீடு திரும்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us