டில்லியில் 126 டிகிரி வெப்பம் உண்மையா ? ஐ.எம்.டி., விளக்கம்
டில்லியில் 126 டிகிரி வெப்பம் உண்மையா ? ஐ.எம்.டி., விளக்கம்
ADDED : மே 29, 2024 10:17 PM

புதுடில்லி: டில்லியில் 126 பாரன்ஹிட் வெப்பம் பதிவு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக ஐ.எம்.டி. தெரிவித்துள்ளது.
இன்று தலைநகர் டில்லி முங்கேஷ்பூர் பகுதியில் பிற்பகல் 2:30 மணியளவில் 126.14 டிகிரி பாரன்ஹீட் (52.09 டிகிரி செல்சியஸ் ) வெப்பம் பதிவானதாகவும், இந்தியாவில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை இது செய்திகள் வெளியாயின.
இப்பதிவு உண்மையானதா என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக ஐ.எம்.டி. எனப்படும் இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறியது, டில்லியில் 20 கண்காணிப்பு மையங்கள் உள்ளன. இவற்றில் 14 நிலையங்களில் வெப்பநிலை பதிவு சராசரியாக 45-50 டிகிரி செல்சியஸ் அளவில் பதிவானது.
இதில் முங்கேஷ்பூரில் சென்சார் கருவியில் ஏற்பட்ட பழுது காரணமாக 126 டிகிரி பாரன்ஹிட் (52.9 டிகிரி செல்சியஸ் ) அதிக வெப்பம் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிழை ஏற்பட்டிருக்கலாம். இது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றார்.
இதற்கிடையே டில்லியில் வெயில் சுட்டெரித்தாலும் ஓரிரு இடங்களில் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.