மேற்கு வங்கத்தில் 12வது கூட்டு ராணுவ பயிற்சி: இந்திய-சிங்கப்பூர் விமானப்படைகள் பங்கேற்பு!
மேற்கு வங்கத்தில் 12வது கூட்டு ராணுவ பயிற்சி: இந்திய-சிங்கப்பூர் விமானப்படைகள் பங்கேற்பு!
ADDED : அக் 21, 2024 09:00 PM

புதுடில்லி: மேற்கு வங்க மாநிலம் கலைகுன்டா விமானப்படை தளத்தில், 12வது கூட்டு ராணுவ பயிற்சியில், இந்திய - சிங்கப்பூர் விமானப்படைகள் பங்கேற்கின்றன.
நவ.13 லிருந்து 21ம் தேதி வரை கூட்டு பயிற்சிகள் நடைபெற உள்ளன.
இது குறித்து விமானப்படை அதிகாரிகள் கூறியதாவது:
இந்த கூட்டு பயிற்சியில், சிங்கப்பூரின் முக்கிய போர் விமானங்களான எப்-16, மற்றும் எப்-15, முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாடுகளுடன் செயல்படும் ஜி-550 மற்றும் சி.130 சிறுவிமானம் ஆகியவை முக்கிய இடம்பெறுகின்றன.
இந்திய விமானப்படை சார்பில் ரபேல், மிராஜ்2000 ஐடிஐ, எஸ்.யு-30எம்.கே.ஐ, தேஜஸ், மிக்-29 மற்றும் ஜாகுவார் ஆகிய முக்கிய விமானங்கள் இடம் பெறுகின்றன.
இரு நாட்டு கூட்டு பயிற்சியின் ஒரு பகுதியாக, பல்வேறு விளையாட்டுகள் மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இப்பயிற்சி வீரர்கள் தங்களின் திறன்களை வெளிப்படுத்தவும், அதிநவீன தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ளவும் உதவும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

