அவதூறு வழக்கில் 15 நாள் சிறை தண்டனை: உத்தவ் சிவசேனா தலைவருக்கு விதித்தது மும்பை கோர்ட்
அவதூறு வழக்கில் 15 நாள் சிறை தண்டனை: உத்தவ் சிவசேனா தலைவருக்கு விதித்தது மும்பை கோர்ட்
ADDED : செப் 26, 2024 03:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை: அவதூறு வழக்கில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்துக்கு 15 நாள் சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது.
மஹாராஷ்டிரா மாநில பா.ஜ., மூத்த தலைவர் கிரித் சோமையா. இவரும் இவரது மனைவியான மேதாவும் இணைந்து பொதுக் கழிப்பிடம் கட்டுவதில் 100 கோடி ரூபாய் ஊழல் செய்து விட்டதாக சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சஞ்சய் ராவத் குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக கிரித் சோமையா மனைவி டாக்டர் மேதா, மும்பை மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, அவதூறான குற்றச்சாட்டை கூறிய சஞ்சய் ராவத்துக்கு 15 நாள் சிறை தண்டனையும் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.