1.5 லட்சம் அக்னிவீர் இளைஞர்களுக்கு ராகுல் வாக்குறுதி
1.5 லட்சம் அக்னிவீர் இளைஞர்களுக்கு ராகுல் வாக்குறுதி
ADDED : பிப் 22, 2024 02:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: 'காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 1.5 லட்சம் அக்னிவீர் இளைஞர்களும் நிரந்தர ராணுவ வீரர்களாக்கப்படுவர்' என அக்கட்சி எம்.பி ராகுல் உறுதி அளித்துள்ளார்.
இது குறித்து ராகுல் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய தேசபக்தியுள்ள இளைஞர்களுக்கு அநீதியை அனுமதிக்க முடியாது.
அக்னிபத் திட்டம் துணிச்சலான வீரர்களுக்கு செய்யும் துரோகம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 1.5 லட்சம் அக்னிவீர் இளைஞர்களும் நிரந்தர ராணுவ வீரர்களாக்கப்படுவர். இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.