பாக்.,கில் லாரி கவிழ்ந்து விபத்து ஒரே குடும்பத்தில் 15 பேர் பலி
பாக்.,கில் லாரி கவிழ்ந்து விபத்து ஒரே குடும்பத்தில் 15 பேர் பலி
ADDED : அக் 17, 2025 12:17 AM
பெஷாவார்: பாகிஸ்தானில், வேகமாக செ ன்ற லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், அதில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர்; எட்டு பேர் காயம் அடைந்தனர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள ஸ்வாத் மாவட்டத்தின் பஹ்ரைன் அருகேயுள்ள கிப்ரால் பகுதியை சேர்ந்த ஒரு நாடோடி குடும்பத்தினர், பஞ்சாப் மாகாணத்திற்கு நேற்று லாரியில் சென்றனர். அந்த லாரி மலகண்ட் மாவட்டம் ஸ்வாத் மோட்டார்வே பகுதியில் சென்றது. அப்போது நிலை தடுமாறிய லாரி சுரங்கப்பாதை அருகே கவிழ்ந்தது. இதில், 15 பேர் உயிரிழந்தனர்.
இது அறிந்து மீட்புக்குழுவினருடன் வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு பத்கேலா மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
விபத்தில் இறந்த 15 பேர் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தகவல் அறிந்த மாகாண முதல்வர் முகமது சோகைல் அப்ரிடி விபத்தில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். காயம் அடைந்த எட்டு பேருக்கு முறையான சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அவர், அவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டார்.