ஸ்.. அப்பா என்னா வெயிலு...:பீஹார் வெயில் கொடுமைக்கு 16 பேர் பலி
ஸ்.. அப்பா என்னா வெயிலு...:பீஹார் வெயில் கொடுமைக்கு 16 பேர் பலி
UPDATED : மே 30, 2024 11:06 PM
ADDED : மே 30, 2024 10:50 PM

பாட்னா: பீஹாரில் கடும் வெயிலுக்குஒரே நாளில் இரண்டு மணி நேரத்திற்குள்ளாக 16 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
வட மாநிலங்களில் தற்போது கோடைக்காலம் வறுத்தெடுத்து வருகிறது. குறிப்பாக பீஹாரில் சமீபத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டன. அம்மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில், 42 டிகிரி செல்ஷியசுக்கு அதிகமாக நேற்று வெயில் பதிவானது. இதனால், 3-0க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் மயங்கி விழுந்தனர்.
ஷேக்புரா மாவட்டத்தில் 16 மாணவியர், பேகுசராயில் 12க்கும் அதிகமான மாணவ - மாணவியர் மயங்கி விழுந்தனர். இவ்வாறு பல இடங்களில் மாணவர்கள் மயக்கமடைந்ததனர். பள்ளிகளை, ஜூன், 8ம் தேதி வரை மூட, பீஹார் அரசு நேற்று உத்தரவிட்டது
இந்நிலையில் வெயில், கடும் அனல் காற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 16 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.