ADDED : டிச 10, 2024 10:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:ஜும்மா மசூதி அருகே உள்ள கபுதார் மார்க்கெட்டில் பறவைகள் பரிதாபகரமான நிலையில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக, 'பீட்டா' அமைப்பு புகார் செய்தது.
இதையடுத்து, போலீஸ் படையினர் கபுதார் மார்க்கெட்டில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அங்கிருந்து 60 புறாக்கள், 49 அலெக்ஸாண்ட்ரின், 39 ரோஜா வளையம் மற்றும் 2 பிளம் தலை கிளிகள் உட்பட 90 கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவை சிறிய மற்றும் சுகாதரமற்ற கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. சில பறவைகளை துணிப் பைகளில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தன.
இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

