1500 அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெற்று மோசடி: கேரளாவில் கண்டுபிடிப்பு
1500 அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெற்று மோசடி: கேரளாவில் கண்டுபிடிப்பு
UPDATED : நவ 27, 2024 05:17 PM
ADDED : நவ 27, 2024 05:16 PM

திருவனந்தபுரம்: கேரளாவில் அரசு அதிகாரிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் உட்பட 1,500 பேர், சட்ட விரோதமாக அரசின் சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் பெற்று மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கேரள அரசு, ஏழை எளியவர்கள், மாற்றுத்திறனாளிகள்
என சமூகத்தின் நலிந்த பிரிவினர் 62 லட்சம் பேருக்கு மாத ஓய்வூதியமாக ரூ.1,600 வழங்குகிறது.
இந்த ஓய்வூதியத்தை, 1,500 அரசு ஊழியர்கள் பல மாதங்களாக சட்டவிரோதமாக பெற்று வந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
அவர்கள் மீது மாநில நிதியமைச்சர் பாலகோபால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிட்டுள்ளதாக அரசின் அதிகாரப்பூர்வ வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:
மாநிலத்தில் 1,458 அரசு ஊழியர்கள், சட்ட விரோதமாக அரசின் சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் பெறுவது கண்டறியப்பட்டுள்ளது.
ஏழை மற்றும் முதியோர்களுக்கான சமூக பாதுகாப்பு ஓய்வூதியத்தை, மேல்நிலைப் பிரிவு ஆசிரியர்கள், கல்லூரி உதவி பேராசிரியர்கள் உட்பட அரசு அதிகாரிகள் பெற்று வந்துள்ளனர்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், முறைகேடாக பெறப்பட்ட ஓய்வூதியத்தை திரும்ப வசூலிக்கவும் காசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

