sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

30 வாழைப்பழம், 4 கிலோ மாதுளம், 20 முட்டை! ரூ.23 கோடி எருமையின் அசத்தல் உணவு மெனு!

/

30 வாழைப்பழம், 4 கிலோ மாதுளம், 20 முட்டை! ரூ.23 கோடி எருமையின் அசத்தல் உணவு மெனு!

30 வாழைப்பழம், 4 கிலோ மாதுளம், 20 முட்டை! ரூ.23 கோடி எருமையின் அசத்தல் உணவு மெனு!

30 வாழைப்பழம், 4 கிலோ மாதுளம், 20 முட்டை! ரூ.23 கோடி எருமையின் அசத்தல் உணவு மெனு!

14


ADDED : நவ 15, 2024 04:25 PM

Google News

ADDED : நவ 15, 2024 04:25 PM

14


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சண்டிகர்; ஹரியானா எருமையை 23 கோடி ரூபாய் வரை ஏலம் கேட்டும் அதன் உரிமையாளர் தராத நிலையில் அந்த எருமை உணவு மெனு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

அதுபற்றிய விவரம் வருமாறு; மீரட் நகரில் சர்வதேச அளவிலான கால்நடை கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்திருந்த பலரும் தாங்கள் வளர்த்து வரும் குதிரைகள், எருமைகள் ஆகியவற்றை பார்வைக்கு அழைத்து வந்தனர்.

ஏராளமான கால்நடைகள் இருந்தாலும் அதில் ஒரேயொரு எருமைதான் அங்குள்ளோரை ஆச்சரியப்பட வைத்தது. அதற்கு காரணம் எந்த எருமை மாட்டின் உயரம், எடை மற்றும் அதன் தரம் தான்.

இந்த எருமையின் உரிமையாளர் கில். ஹரியானாவின் சிர்ஸா பகுதியைச் சேர்ந்தவர். தமது எருமைமாட்டுக்கு அவர் அன்மோல் என்ற பெயர் வைத்துள்ளார். இந்த எருமைமாடு, முரா என்ற ரகத்தைச் சேர்ந்தது.

கால்நடை கண்காட்சியில் இந்த எருமைமாட்டை 23 கோடி ரூபாய் வரை பலரும் ஏலம் கேட்டனர். ஆனால் உரிமையாளர் கில்லோ, எங்கள் குடும்பத்தில் ஒருவர் அன்மோல் என்று கூறி அதற்கு உடன்பட மறுத்துவிட்டார். அதே நேரம் எருமையின் தினசரி உணவு பட்டியலைக் கேட்டு கண்காட்சிக்கு வந்தவர்கள் அசந்தே விட்டனர்.

13 அடி நீளம், 6 அடி அகலம், 1500 கிலோ எடை கொண்ட அன்மோலுக்கான தினசரி உணவுக்கு செலவிடப்படும் தொகை 1,500 ரூபாய். 250 கிராம் பாதாம், 30 வாழைப்பழங்கள், 4 கிலோ மாதுளை, 5 கிலோ பால், 20 முட்டைகள் ஆகியவற்றை அன்மோல் சாப்பிடுகிறது. இதுதவிர, கேக், பசுந்தீவனம், நெய், சோயாபீன்ஸ், மக்காச்சோளம் ஆகியவையும் உணவு பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

உணவு மட்டுமல்ல, தினசரி சிறப்பான கவனிப்பும் அன்மோல் எருமைக்கு உண்டு. தினமும் இருமுறை எண்ணெய் (கடுகு+பாதாம் கலந்தது) குளியல், மசாஜ் என செமத்தியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறது. அன்றாட வாழ்க்கையே சொகுசாக மாறியிருக்கும் அன்மோலைக் கண்டு ஆச்சரியப்படாதவர்களே இல்லை எனலாம். இனி யாரேனும் எருமை என்று நம்மை திட்டினால்... நாம் அன்மோலை நினைத்து ஆறுதல் பட்டுக் கொள்ளலாம் என்று சொல்லலாம்.






      Dinamalar
      Follow us