நீயா ? நானா? போட்டா போட்டி! சூடுபிடிக்கும் ஹரியானா தேர்தல்
நீயா ? நானா? போட்டா போட்டி! சூடுபிடிக்கும் ஹரியானா தேர்தல்
ADDED : செப் 14, 2024 07:27 AM

சண்டிகர்; ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 1,561 பேரும், சுயேட்சையாக 1,747 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஹரியானா சட்டப்பேரவை தேர்தலுக்காக ஓட்டுப்பதிவு அக்டோபர் 5ம் தேதி நடக்கிறது. பதிவாகும் அனைத்து வாக்குகளும் அக்டோபர் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர்கள் தேர்வு என அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந் நிலையில் அரசியல் கட்சிகள் சார்பில் 1,561பேரும், சுயேட்சையாக 1,747 பேரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக ஹரியானா தலைமை தேர்தல் அதிகாரி பங்கஜ் அகர்வால் கூறி உள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது; வேட்பு மனு தாக்கல் செய்தவர்களில் விருப்பம் உள்ளோர் அவற்றை வரும் 16ம் தேதிக்குள் வாபஸ் பெறலாம். அதே நாளில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்குமான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். வேட்பாளர்களுக்கான சின்னங்களும் அன்றைய தினமே அறிவிக்கப்பட்டுவிடும்.
2014ம் ஆண்டு தேர்தலின் போது 1,351 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 2019ம் ஆண்டில் 961 பேர் வேட்பாளர்களாக களம் இறங்கினர்.
இவ்வாறு அவர் கூறினார்.

