sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

16 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என... எச்சரிக்கை! ராய்ச்சூரில் 44 டிகிரி செல்சியஷை தாண்டிய வெப்பம்

/

16 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என... எச்சரிக்கை! ராய்ச்சூரில் 44 டிகிரி செல்சியஷை தாண்டிய வெப்பம்

16 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என... எச்சரிக்கை! ராய்ச்சூரில் 44 டிகிரி செல்சியஷை தாண்டிய வெப்பம்

16 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என... எச்சரிக்கை! ராய்ச்சூரில் 44 டிகிரி செல்சியஷை தாண்டிய வெப்பம்


ADDED : ஏப் 23, 2024 11:36 PM

Google News

ADDED : ஏப் 23, 2024 11:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : மாநிலத்தில் கோடை மழை ஏமாற்றியதுடன், பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஷை தாண்டியுள்ளது. 'அடுத்த ஐந்து நாட்கள், 16 மாவட்டங்களில் வெப்பக்காற்று வீசும்' என, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ராய்ச்சூரில் நேற்று 44 டிகிரி செல்ஷிஷை தாண்டி வெப்பம் பதிவானது.

கர்நாடகாவில், 2023ல் எதிர்பார்த்த அளவில் பருவமழை பெய்யவில்லை. தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழைகள் கைவிட்டன. அணைகள், ஆறுகள், ஏரிகள் வறண்டன. குளிர் காலம் முடியும் முன்னரே, மாநிலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க துவங்கியது. பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்தே கோடை கால அனுபவம் ஏற்பட்டது. தொடர்ந்து வெப்பம் ஏறுமுகமானது.

மாநிலத்தின் பல மாவட்டங்களில், கோடை மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் கூறியது. ஆனால் சில மாவட்டங்களில் மழை தலை காண்பிக்கவில்லை. இதன் விளைவாக வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கிறது. தீயாக கொளுத்தும் வெப்பத்தை தாங்க முடியாமல், மக்கள் பரிதவிக்கின்றனர். காலை 8:00 மணிக்கே வெயில் மண்டையை பிளக்கிறது. மக்கள் வீட்டில் இருந்து வெளியே கால் வைக்கவே அஞ்சும் அளவுக்கு, வெயில் அச்சுறுத்துகிறது.

நாளுக்கு நாள் வெப்பம் அதிகரிக்கிறதே தவிர, குறையவில்லை. 16 மாவட்டங்களில் நேற்று வெப்பநிலை 40 டிகிரி செல்சியஷை தாண்டியுள்ளது. ராய்ச்சூரில் நேற்று 44 டிகிரி செல்சியஷை தாண்டி வெப்ப நிலை பதிவானது.

யாத்கிரியில் 43.3, கொப்பாலில் 43, பல்லாரியில் 42, கோலார், விஜயபுரா, துமகூரு, தாவணகெரே, சித்ரதுர்கா, பீதர் மாவட்டங்களில் தலா 41, பாகல்கோட்டில் 40.3, கலபுரகி, கதக், ஹாவேரி, சிக்கமகளூரு, தார்வாடில் தலா 40 டிகிரி செல்சியஷ் வெப்ப நிலை பதிவானது.

இந்த மாவட்டங்களில், வழக்கத்தை விட மூன்று முதல் ஐந்து டிகிரி செல்சியஷ் கூடுதல் வெப்ப நிலை பதிவாகிறது. ஷிவமொகாவில் 37.4, மாண்டியா, மைசூரில் 37, சாம்ராஜ்நகர், பெங்களூரு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில், 37 டிகிரி செல்சியஷ் வெப்பம் பதிவானது.

இந்நிலையில் அடுத்த ஐந்து நாட்கள், வெப்பக்காற்று வீசும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது:

மாநிலத்தின் 16 மாவட்டங்களில், 40 டிகிரி செல்சியஷ் வெப்ப நிலை பதிவாகிறது. அடுத்த ஐந்து நாட்கள் இந்த மாவட்டங்களில் வெப்ப காற்று வீசும். சமவெளி பகுதிகளில் வெப்ப நிலை, 40 டிகிரி செல்சியஷாக அதிகரித்தால், மலைப்பகுதிகளில் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஷ் அதிகரித்தால், வெப்ப காற்று என, கருதப்படும்.

மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம், 1960 முதல் 1990 வரை, 1997 முதல் 2017 வரை வானிலை மாற்றங்கள் குறித்து, ஆய்வு நடத்தியது. முதல் 30 ஆண்டுகள், வானிலை மாற்றங்கள் எப்படி இருந்தன, அதன்பின் 30 ஆண்டுகளில் என்னென்ன மாற்றங்கள் நடந்தன என்பது குறித்து, ஆய்வு நடந்தது.

இந்த ஆய்வில் மழை, வெயில், குளிர் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தது தெரிந்தது. இதன்படி அடுத்து வரும் ஆண்டுகள், வெப்பநிலை அதிகரிக்கும்.

தட்சிண கன்னடா, உடுப்பி, பாகல்கோட், பெலகாவி, பீதர், தார்வாட், கதக், குடகு, ஹாசன், மைசூரு, மாண்டியாவில் சாதாரண மழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற இடங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மருத்துவ வல்லுனர்கள் கூறியதாவது:

வெப்பக்காற்று வீசும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்தில், அக்கறை காண்பிப்பது அவசியம். தலைவலி, வாந்தி, உடற்சோர்வு, காய்ச்சல் என, பல விதமான பிரச்னைகள் ஏற்படலாம். எனவே மிகுந்த கவனம் தேவை.

இந்த வெப்பம், சிறு குழந்தைகள், கர்ப்பிணியர், மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் அபாயம் உள்ளது. வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருக்கும் போது, வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது. உடலுக்கு நீர்ச்சத்தை கொடுக்கும் காய்கறிகள், பழங்களை சாப்பிட வேண்டும். ரசாயனம் கலந்த குளிர்பானங்களை விட, இளநீர், மோர் போன்ற இயற்கை பானங்களை அருந்தலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

***






      Dinamalar
      Follow us