ஜூனில் கர்நாடக மேலவையில் 16 எம்.எல்.சி.,க்கள் ஓய்வு
ஜூனில் கர்நாடக மேலவையில் 16 எம்.எல்.சி.,க்கள் ஓய்வு
ADDED : மார் 02, 2024 04:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கர்நாடக மேலவையில் 16 எம்.எல்.சி.,க்களின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது.
பா.ஜ.,வின் ரகுநாத மல்யாபுரே, தேஜஸ்வினி கவுடா, நஞ்சுண்டி விஸ்வ கர்மா, ரவிகுமார், முனிராஜு கவுடா, ருத்ரேகவுடா, தேவகவுடா; காங்கிரசின் நாராயணசாமி, அமைச்சர் போசராஜ், அரவிந்த் குமார் அராலி, கோவிந்தராஜ், ஹரிஷ் குமார், சந்திர சேகர் பாட்டீல்; ம.ஜ.த.,வின் போஜேகவுடா, மரிதிப்பேகவுடா, பாருக் ஆகியோரின் பதவிக்காலம், வரும் ஜூன் 16ல், முடிவடைய உள்ளது.
பதவிக் காலத்தின் இறுதிக் கட்டத்தில் உள்ள, 16 எம்.எல்.சி.,க்களுக்கு நேற்று முன் தினம், பிரிவு உபசார நிகழ்ச்சி நடந்தது.
உறுப்பினர் பலரும் உரையாற்றினர். பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்தனர்.

