போலீஸ் கஸ்டடியில் 16 வயது தலித் சிறுவனுக்கு டார்ச்சர்; உ.பி.,யில் நடந்த ஜெய்பீம் சம்பவம்
போலீஸ் கஸ்டடியில் 16 வயது தலித் சிறுவனுக்கு டார்ச்சர்; உ.பி.,யில் நடந்த ஜெய்பீம் சம்பவம்
ADDED : செப் 19, 2024 07:06 AM

லக்னோ: உ.பி.யில் 16 வயது தலித் சிறுவன் சித்ரவதை செய்யப்பட்டு, போலீஸ் கஸ்டடியிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழப்பு
கடந்த 3ம் தேதி திருட்டு வழக்கு ஒன்றில் தொடர்பு இருப்பதாகக் கூறி 16 வயது சிறுவனை ஹேரி போலீஸ் கைது செய்தது. திருட்டு சம்பவம் தொடர்பாக சிறுவனை போலீசார் கடுமையாக தாக்கி சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுவன் லக்னோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உத்தரவு
போலீஸ் கஸ்டடியில் தலித் சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக எஸ்.பி., கணேஷ் பிரசாத் சஹா தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டம்
இதனிடையே, சிறுவனின் சொந்த ஊரான சிஸவான் காலா கிராமத்தைச் சேர்ந்த மக்கள், சம்பந்தப்பட்ட போலீஸார் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யக்கோரி, தேசிய நெடுஞ்சாலையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.