பயணியர் எண்ணிக்கை அதிகரிப்பதால் கே.எஸ்.ஆர்.டி.சி.,க்கு 1,600 பஸ்கள்
பயணியர் எண்ணிக்கை அதிகரிப்பதால் கே.எஸ்.ஆர்.டி.சி.,க்கு 1,600 பஸ்கள்
ADDED : மார் 02, 2024 04:22 AM

பெங்களூரு : கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு 'சக்தி' திட்டத்தை செயல்படுத்திய பின், அரசு பஸ்களில் பயணியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், 6,100 புதிய பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
முதல்வர் சித்தராமையா தலைமையில், பெங்களூரின் விதான்சவுதாவில் நேற்று முன் தினம் மாலை, அமைச்சரவை கூட்டம் நடந்தது.
மாநிலத்தில் 'சக்தி' திட்டம் செயல்படுத்தப்பட்ட பின், கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்களில் பயணியர் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. பயணியரின் வசதிக்காக கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். அடுத்த ஓராண்டில், 6,100 புதிய பஸ்களை இயக்க, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதற்கட்டமாக 260 பஸ்கள், கே.எஸ்.ஆர்.டி.சி.,யில் சேர்க்கப்படும்.
வட மாவட்டங்களுக்கு, 120 குளிர்ச்சாதன வசதி இல்லாத, 50 குளிர்சாதன வசதி உள்ள பஸ்கள் இயக்கப்படும். தொழிற்துறையை ஊக்குவிக்க, 50 கோடி ரூபாய் செலவில், மாநிலம் முழுதும் தொழிற்துறை சிறப்பு மையங்கள் அமைக்கப்படும்.
கோடைகாலம் நெருங்கி வருவதால், காவிரி நீர்ப்பாசன கார்ப்பரேஷன் மூலம், வறட்சி பாதித்த பகுதிகளில் ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்படும்.
பெங்களூரில் உள்ள சி.வி.ராமன் மருத்துவமனை, மங்களூரில் உள்ள வென்லாக் மருத்துவமனை உட்பட ஒன்பது மருத்துவமனைகளுக்கு 135 கோடி ரூபாய் செலவில் சிகிச்சை வசதிகள் செய்யப்படும்.
இவ்வாறு முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

