உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஏப் 02, 2026 01:12 AM

அ நிறம் | அளவு
புதுடில்லி: சட்டவிரோதமாக காஸ் சிலிண்டர் விற்றவர் கைது செய்யப்பட்டு, 17 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தென்மேற்கு டில்லி தாப்ரியில் சட்டவிரோதமாக, அதிக விலைக்கு காஸ் சிலிண்டர் விற்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. குற்றப்பிரிவி போலீசார், சீதாபுரியில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு, மோகன்லால் கார்க்,61, தன் கடையில் காஸ் சிலிண்டரில் காஸ் நிரப்பிக் கொண்டிருந்தார். சுற்றி வளைத்து அவரை கைது செய்தனர்.
அங்கிருந்த இன்டேன், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் 17 வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரு கிலோ 200 ரூபாய்க்கு காஸ் விற்பனை செய்து வந்ததாக மோகன்லால் ஒப்புக் கொண்டார்.
